திடீரென உத்திரபிரதேசம் சென்ற சிம்பு..எதற்காக தெரியுமா?

cinema hero celebrity
By Jon Feb 26, 2021 01:35 AM GMT
Report

நடிகர் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கோவிலுக்கு திடீரென வருகை தந்தது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்திலும் நடிக்க சிம்பு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் சிம்பு திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார்.

அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கங்கையாற்றில் தீபம் வழிபாடு செய்தது திருமணத்திற்கான பரிகாரம் என்று கூறப்படுகிறது.