அரசுப் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 22, 2023 11:50 AM GMT
Report

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பள்ளி மைதானத்தை மாணவர்கள் பெருக்கி, சுத்தம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசுப் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

உத்தரபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி மைதானத்தை துடைத்து, பெருக்கி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் பள்ளி மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர். இதை யாரோ வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இச்செயலில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகத்தினர் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   

uttar-pradesh-school-student-cleaning-viral-video