உபியில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்பு

india dead sister Uttar Pradesh
By Jon Mar 23, 2021 07:43 PM GMT
Report

உத்தரபிரதேசத்தில் காணாமல் போன சகோதரிகள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசதத்தின் பிலிப்பட் மாவட்டம் காசிம்பூர் கிராமத்தில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவருக்கு இரண்டு மகள்கள். முறையே 19 மற்றும் 17 வயதுடைய இருவரும் நேற்று இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதையயடுத்து உறவினர்கள் சகோதரிகளைத் தேடியுள்ளனர். சகோதரிகளில் ஒருவர் அருகில் உள்ள ஜசுவாலி என்ற இடத்தில வயல் ஒன்றில் பிணமாகக் கிடந்தார். மற்றொருவர் இன்று காலை அருகில் உள்ள மரம் ஒன்றில் பிணமாகத் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

ஆனால் இருவரது கழுத்திலும் ஒரே மாதிரியான காயங்கள் இருந்த சம்பவம் பெற்றோர்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களும் பிரேதப பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்து வருவதாகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜெய் பிரகாஷ் கூறினார்.