நடுரோட்டில் எம்எல்ஏ ராஜுபால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாளர் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சிசிடிவி வைரல்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Feb 25, 2023 01:44 PM GMT
Report

 உ.பி.யில் பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ்பால் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட உமேஷ்பால்

உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூபால். இவர் கடந்த 2005-ம் ஆண்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ்பால். இந்நிலையில் இன்று காலை உமேஷ்பால் வெளியில் சென்று விட்டு பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் காரை விட்டு இறங்கியதும் பின்னால் இருந்து ஓடி வந்த மர்மநபர்கள் அவர் மீது முதலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியாலும் சுட்டும் தாக்குதல் நடத்தினர். 2 பாதுகாவலர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தபோது மர்ம கும்பல் போலீசார் மீதும் துப்பாக்கியால் சுட்டது.

இதில் 2 போலீசாரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த உமேஷ்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 2 போலீசாருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது துப்பாக்கிச் சூட் நடத்திய காட்சிகள் அடங்கிய சிசிடிவி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

uttar-pradesh-rajupal-shooters-umesh-pal

[8QXLUM