ரயில்வே கிராசிங்கில் டெடி உடை அணிந்து நடனமாடிய நபர் - தட்டித் தூக்கிய போலீசார்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 23, 2023 01:58 PM GMT
Report

ஆபத்தை உணராமல் ரயில்வே கிராசிங்கில் டெடி உடை அணிந்து நடனமாடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

டெடி உடை அணிந்து நடனமாடிய நபர் கைது

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

உத்திரப்பிரதேச மாநிலம், நந்த் நகர் ரயில்வே கிராசிங்கில், ஒருவர் தனது YouTube சேனலுக்காக டெடி உடை அணிந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகவே, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட சுனில் குமார் (22) தனது எஸ்.எம். சேனலில் 1600 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அந்த சேனலில் அவர் வேடிக்கையான வீடியோவை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

uttar-pradesh-railways-teddy-costume-dancing