Punjab மற்றும் Uttar Pradesh சட்டசபை தேர்தல் நிலவரம்

assemblyelections2022 uttarpradeshpunjabelections2022
By Swetha Subash Feb 20, 2022 09:24 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

உத்திரப்பிரதேசத்தில் மூன்றாம் கட்ட சட்டசபைத் தேர்தல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.

இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம்தேதியும் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 14-ம் தேதியும் நடைபெற்றது.

முதல்கட்ட தேர்தலில் 60.17 சதவீத வாக்குகளும் இரண்டாம் கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்த நிலையில் ஹாத்ரஸ், கான்பூர், கான்பூர் ஊரகம், தெஹாத், அவுரயா, கன்னோஜ், எட்டாவா, ஃபரூக்காபாத், ஜான்சி, ஜலோன், லலித்பூர், ஹமீர்பூர்,

மஹோபா, பெரோஸாபாத், மெயின்புரி, ஏட்டா, காஸ்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

அதேபோல் பஞ்சாப் மாநில 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 93 பெண் வேட்பாளர்கள் உட்பட 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.