இஸ்லாமியர்களை கல்லறைக்கு அனுப்பிவிடுவோம் - மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரி
உ.பி.யில் இந்து மத ஊர்வலங்களுக்கு இடையூறு விளைவிக்கும் இஸ்லாமியர்களை கல்லறைக்கு அனுப்பிடுவோம் என்று மேடையில் ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.
மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரி
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு பெரிய இந்து கூட்டத்தின் முன்பு மேடையில், ஒரு போலீஸ் அதிகாரி மிரட்டல் விடுத்து பேசுயுள்ளார்.
அவர் பேசுகையில், இந்து மத ஊர்வலங்களுக்கு இடையூறு விளைவிக்கும் இஸ்லாமியர்களை கல்லறைக்கு அனுப்பிடுவோம்.
இந்து மதத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்கள் வைத்து இடிக்கப் போகிறோம் என்று மிரட்டல் விடுத்து பேசினார். அவர் பேசும்போது அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி மசூதி ஒன்றின் முன்புறம் உரத்த டிஜே இசையால் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பிறகு இவ்வாறு போலீஸ் அதிகாரி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
A police officer in @BJP4India ruled Uttar Pradesh issued open threats to send people (Muslims) to graves & bulldoze their houses if he finds them disrupting Hindu religious processions.
— Indian American Muslim Council (@IAMCouncil) October 12, 2022
Tells much about pervasiveness of Hindutva ideology over Police. pic.twitter.com/UdQDY6pTsT