மெஸ்ஸியின் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு எச்சரித்த உ.பி. போலீசார் - வைரலாகும் வீடியோ...!

Lionel Messi Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 19, 2022 01:57 PM GMT
Report

மெஸ்ஸியின் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு உ.பி. போலீசார் எச்சரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு எச்சரித்த உ.பி. போலீசார்

நேற்று உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து சம்பியன் பட்டத்தை பெற்றி வரலாறு சாதனைப் படைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, உத்திரப்பிரதேச காவல்துறையும் ஒரு சுவாரஸ்யமான செய்தியை வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று சாலைப் பாதுகாப்பு குறித்த பதிவைப் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், FIFA உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் பரபரப்பான டிரிப்பிள் வீடியோவுடன், இரண்டு ஆண்கள் பைக்கில் சென்று ஒரு கட்டிடத்தில் மோதிக் கொண்டிருக்கும் மற்றொரு வீடியோவுடன் உபி காவல்துறை பகிர்ந்துள்ளது.

ஜிக்ஜாக் வாகனம் ஓட்டுபவர்களை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உ.பி. போலீசாருக்கு பாராட்டை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-police-messi-argentina-traffice