செலவு பற்றி கேட்ட தாய்.. - ஈவு இரக்கமின்றி தெருவில் கொடூரமாக தாக்கிய மகன் - பதற வைக்கும் வீடியோ வைரல்..!

Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உத்திரப்பிரதேச மாநிலத்தில், செலவு பற்றி கேட்ட தாயை இரக்கமின்றி அடித்து உதைத்த கொடூர மகனின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயை அடித்த கொடூர மகன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், மகராஜ்கஞ்ச்சியில் செலவு பற்றி கேட்ட தாயை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்தார். மேலும், தாயை தெருவில் உருட்டி, உருட்டி காலால் எட்டி உதைத்து, துணியை பிடித்து இழுத்து கைகளால் குத்தி வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

இதனையடுத்து, தாயின் அலறல் சத்தம் கேட்க, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தாயை மீட்டனர்.

தாயை அடித்ததை பார்த்து பெண் ஒருவர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்க, மகன் அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.

தற்போது இது குறித்த சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தாயை அடித்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

uttar-pradesh-mother-attack-viral-video