250 கிராம் உருளைக்கிழங்கை காணோம்.. புகார் அளித்த நபர் -விசாரணையில் மிரண்ட போலீஸ்!

Potato Viral Video Uttar Pradesh
By Vidhya Senthil Nov 04, 2024 01:40 PM GMT
Report

 சமையலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 250 கிராம் உருளைக்கிழங்கு திருடப்பட்டதாக நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் 

உத்தரப்பிரதேச மாநிலம் கோட்வாலி மன்னபுர்வா பகுதியைச் சேர்ந்த விஜய் வர்மா. இவர் உருளைக்கிழங்கை யாரோ திருடிவிட்டதாக நினைத்துக் காவல் அவசர அழைப்புப் பிரிவிற்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

A person reported that 250 grams of potatoes were stolen

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விஜய் வர்மாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சமைப்பதற்காக 250 கிராம் உருளைக்கிழங்கை ஒதுக்கி வைத்ததாகவும், திரும்பி வந்து பார்த்தபோது திருடு போய்விட்டதாகக் கூறியுள்ளார்.

புகார்

மேலும் உருளைக்கிழங்கை யார் எடுத்துக் கொண்டு போய் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று காவல்துறை யினர் அவரிடம் கேட்டபோது, ​​காவல்துறையால் தான் அதனைக் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் மது அருந்தியதும் தெரிய வந்தது. தொடர்ந்து மது குடித்துக் குறித்து அந்த நபரிடம் கேள்வி எழுப்ப ஆமாம், வேலையில் நீண்ட நாள் கழித்து நான் குடித்தேன், ஆனால் அது முக்கியமில்லை.

காணாமல் போன உருளைக்கிழங்கைக் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வுகளை வீடியோவாக காவல்துறையினர் பதிவு செய்தனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவருக்கும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.