அன்று தெரியாமல் செய்த தவறு.. பின் தொடர்ந்து வரும் பாம்பு -11 முறை சிறுமியை கடித்த சம்பவம்!
சிறுமியை 11 முறை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படங்களில் வருவது போல் பாம்புகள் ஒருவரைப் பழிவாங்குவதும், அவரைப் பின்தொடர்வது நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஏற்படும்.
பாம்பு
இந்த செயலை பாம்புகள் பழிவாங்குவதாகவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையாக உள்ளது. இருப்பினும், அறிவியல் பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இந்த நிலையில், சிறுமியை 11 முறை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தல்பத்.இவரது மகள் ரோஷினி(வயது 19) சில ஆண்டுகளுக்கு முன் ரோஷினி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது தவறுதலாகப் பாம்பை மிதித்தபோது ரோஷினியை அந்த பாம்பு கடித்துள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார்.ஆனால், தற்போதுவரை அந்த பாம்பு இளம்பெண்ணை பின் தொடர்ந்து கடிப்பதாக அவரது தந்தை தல்பத் கூறியுள்ளார்.
5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை ரோஷினியை அந்த கருப்பு பாம்பு 11 முறை கடித்துள்ளதாகவும்,உறவினர்கள் வீட்டிற்குச் சென்றாலும் விடுவதில்லை என்றும் தல்பத் கூறியுள்ளார்.
இளம்பெண்
அதன்பிறகு கடந்த 11 மாதங்களில், அந்த பாம்பு சிறுமியை 11 முறை கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சுழலில் ரோஷினியை மீண்டும் கடுத்துள்ளது. அப்போது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், பாம்பு கடிக்காமல் இருக்கப் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனளிக்கவில்லை என்றும் ஒரே பாம்பு ஏன் மீண்டும் மீண்டும் அந்த சிறுமியை மட்டுமே கடிக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாகச் சிறுமியின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.