தராசை தண்டவாளத்தில் தூக்கி வீசிய போலீசார் - எடுக்கச் சென்ற வியாபாரி... - ரயில் மோதி இரு கால்களை இழந்த சோகம்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 03, 2022 01:03 PM GMT
Report

உ.பி.யில் தராசை தண்டவாளத்தில் எடுக்கச் சென்ற வியாபாரி ரயில் மோதி இரு கால்களை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் மோதி இரு கால்களை இழந்த வியாபாரி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் ஜிடி சாலையின் ஓரங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை போலீசார் அகற்றி வந்தனர்.

அப்போது, ஒரு காய்கறி வியாபாரியின் எடை தராசை போலீசார் தண்டவாளத்தில் தூக்கி வீசினர். அப்போது, அந்த தராசை எடுக்கச் சென்ற வியாபாரி மீது ரயில் மோதியது.

இந்த விபத்தில் வியாபாரியின் இரு கால்களை இழந்துள்ளார். விரைந்து ஓடி வந்து வியாபாரியை மீட்ட போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், போலீசாருக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

uttar-pradesh-lost-both-legs-viral-video