பட்டப்பகலில் வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற கும்பல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கும்பல் ஒன்று பட்டப்பகலில் வீடு புகுந்து குழந்தையை கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை கடத்த முயன்ற கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் தண்ணீர் கேட்பது போல் நுழைந்தான். அதன் பிறகு அடுத்தடுத்து 3 நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். திடீரென வீட்டிற்குள் இருந்த குழந்தையை கடத்த முயற்சி செய்தனர்.

அப்போது, வீட்டில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால், பயந்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் தப்பி ஓடிய காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து, அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-kidnap-children-viral-video