உ.பி.யில் கபடி பெண் வீரங்கனைகளுக்கு கழிவறையில் வழங்கப்பட்ட உணவு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உ.பி.யில் கபடி போட்டியில் கலந்து கொண்ட பெண் வீரர்களுக்கு கழிவறை தரையில் உணவு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் வழங்கப்பட்ட உணவு
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், சஹ்ரான்பூரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டியில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட பெண் வீரர்களுக்கு கழிவறையின் தரையில் உணவு வழங்கப்படுவது.
இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Highly shameful to see that over 300 girl players of state level U-16 Kabaddi tournament are given food on floor of toilet at sports stadium of Sahranpur, Uttar Pradesh.
— Shashank Shekhar Jha (@shashank_ssj) September 20, 2022
Saharanpur sports officer Animesh Saxena is now suspended by @myogiadityanath ji.
pic.twitter.com/ADzEOxuQ18