நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh Death
By Nandhini Dec 05, 2022 10:34 AM GMT
Report

உ.பி. நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகர், கித்வாய் பகுதியில் தன் நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரது நண்பர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இது குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.       

uttar-pradesh-home-with-friends-returning-death