உ.பி.யில் தாழ்த்தப்பட்ட இளைஞன் மீது சராமரியாக தாக்குதல் - பதற வைக்கும் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini 1 மாதம் முன்

உ.பி.யில் தாழ்த்தப்பட்ட இளைஞன் மீது சராமரியாக தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாழ்த்தப்பட்ட இளைஞன் மீது தாக்குதல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உ.பி., மாநிலம் காஜியாபாத்தில், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு பேர் அவன் அருகில் வந்து மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அந்த இளைஞன் முதலில் மறுப்பு தெரிவிக்கிறார்.

இதனையடுத்து, அந்த இளைஞரை இருவரும் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினர். இதனையடுத்து, அந்த இளைஞர் மன்னிப்பு கேட்கிறான். ஆனாலும், அவர்கள் விடாமல் அந்த இளைஞனை கடுமையாக தாக்குகின்றனர்.

இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.    

uttar-pradesh-ghaziabad-student-attack