உ.பி.யில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வான்வழி மூலம் ஆய்வு...!

Uttar Pradesh Yogi Adityanath
1 வாரம் முன்

உ.பி.யில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வான்வழி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

உத்தர பிரதேச கனமழை

உத்தர பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. உத்திரபிரதேச சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் பெய்த கனமழையால் கார்கள் நீரில் மூழ்கின. பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வான்வழி ஆய்வு

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வான்வழி ஆய்வு நடத்தினார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

uttar-pradesh-flood-yogi-adityanath-cm

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.