பல தடைகளைத் தாண்டி உத்தரபிரதேசத்தின் அரசுப் பேருந்து ஓட்டுநரான முதல் பெண்...!

Uttar Pradesh Viral Photos
By Nandhini Dec 23, 2022 08:36 AM GMT
Report

உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பணியமர்த்தப்பட்ட 26 பெண் ஓட்டுநர்களில், எண்ணற்ற போராட்டங்களைத் தாண்டி, மாநிலத்தின் முதல் அரசுப் பேருந்து ஓட்டுநராக பிரியங்கா சர்மா மாறியுள்ளார்.

முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர்

இது குறித்து பிரியங்கா சர்மா பேசுகையில்,

என் கணவர் அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த பின்பு, என்னுடைய 2 குழந்தைகளை வளர்க்கும் முழு பொறுப்பு எனக்கு வந்தது. நல்ல வேலைவாய்ப்புகளுக்காக நான் டெல்லிக்கு மாறினேன். எனக்கு முதலில் ஒரு தொழிற்சாலையில் உதவியாளராக வேலை கிடைத்தது.

ஆனால் பின்னர், நான் டிரைவராக சேர்ந்தேன். பிறகு, நான் ஓட்டுநர் பயிற்சி எடுத்தேன். இதனையடுத்து, மும்பைக்கு குடிபெயர்ந்தேன். மேலும் வங்காளம் மற்றும் அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் செய்தேன்.

பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி என்றார். 

uttar-pradesh-first-woman-government-bus-driver