தன் வளர்ப்பு நாய்க்கு ராம்..ராம்... என்று கூற சொல்லி பயிற்சி கொடுத்த பா.ஜ.க. எம்எல்ஏ...! வைரல் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Feb 02, 2023 07:56 AM GMT
Report

தன் வளர்ப்பு நாய்க்கு ராம்..ராம்... என்று கூற சொல்லி பயிற்சி கொடுத்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் வளர்ப்பு நாய்க்கு பயிற்சி கொடுத்த பா.ஜ.க. எம்எல்ஏ

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேசம், சீதாப்பூர் மாவட்டம், சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. இருப்பவர் கியான் திவாரி. இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த செல்லப்பிராணிக்கு தினமும் பிஸ்கட் கொடுப்பதற்கு முன்பு, அதனை ராம் ராம் என்று கூறும்படி கேட்கிறார்.

நாய் சற்று நேரம் குறைப்பதும், முனங்குவதும் என்று உள்ளது. இதைத்தொடர்ந்து சில முறை அவர் முயற்சி செய்து விட்டு, அதற்கு சாப்பிட பிஸ்கட் கொடுக்கிறார்.

தற்போது இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஜெய் ஸ்ரீராம் என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.  

uttar-pradesh-dog-ram-ram-teaching-viral-video