நோயாளிகள் வார்டில் புகுந்த தெருநாய்... - பிஸ்கட் சாப்பிட்ட அதிர்ச்சி வீடியோ...!
உ.பி.யில் நோயாளிகள் வார்டில் புகுந்த தெருநாய் ஒன்று வார்டில் நோயாளிகளின் பிஸ்கட்டை சாப்பிட்ட அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகள் வார்டில் புகுந்த தெருநாய்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்திரப்பிரதேச மாநிலம், பண்டாவில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் படுக்கையில் நாய் ஏறி, நோயாளியின் பிஸ்கட் சாப்பிடுகிறது. இதை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
சமீபத்தில், ஒரு பசு மருத்துவமனையில் சுற்றித் திரிந்த வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.