உ.பி. சாலையில் கம்பீரமாக வலம் வந்த ராட்சத முதலை - வைரலாகும் திக்.. திக்.. வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini Aug 27, 2022 09:41 AM GMT
Report

உத்திரபிரதேசத்தில் சாலையில் கம்பீரமாக வலம் வந்த ராட்சத முதலையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சாலையில் வலம் வந்த ராட்சத முதலை

உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர் உத்திரபிரதேசத்தில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. இதன் காரணமாக உத்தரபிரதேசம் மாநிலம், பிரக்யாராஜ் மாவட்டத்தில் சாலைகளில் ஒரு பெரிய முதலை ஒன்று வலம் வந்தது. இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டில் ஒதுங்கினர்.

Uttarpradesh-crocodile-viral-video

மடிக்கிப்பிடித்த வனத்துறையினர்

பலர் சாலைகளில் கம்பீரமாக சென்ற ராட்சத முதலையை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கடுமையாக போராடி அந்த ராட்சத முதலையை கயிறு மூலம் மடிக்கிப் பிடித்தனர்.