அரசு மருத்துவமனையில் நுழைந்து ஜாலியாக சுற்றி திரிந்த பசு - ஷாக்கான நோயாளிகள்...!
அரசு மருத்துவமனையில் சுற்றி வந்த பசு
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பெரிய பசு ஒன்று நுழைந்து நோயாளிகள் மத்தியில் கம்பீரமாக நடந்து சுற்றித் திரிந்தது. இந்த பசுவைப் பார்த்த நோயாளிகள் மருத்துவமனையில் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து மருத்துவமனை நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Cow mata walks like doctor in govt hospital Uttar Pradesh. #UttarPradesh pic.twitter.com/8Gbf9pCFhR
— Abdul (@abdustaan) January 5, 2023