முகவரி கேட்பதுபோல் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் செயின் பறித்த நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்...!
உ.பி.யில் முகவரி கேட்பதுபோல் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் செயின் பறித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்ணிடம் செயின் பறித்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் முகவரி கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்த நபர், பெண்ணிடம் விலாசம் கேட்கிறார். ஆனால், உடனே சந்தேகமடைந்த அப்பெண் அவரை வெளியே போகச் சொல்கிறார். மீறியும் பெண்ணிடம் நெருங்கி வந்த அந்த நபர் திடீரென அவர் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எப்போதும் சற்று எச்சரிக்கையாகவே இருங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Alert: Chain snatcher entered the house on the pretext of asking the address; then snatched the woman's golden chain in Agra, Uttarpradesh
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) December 5, 2022
पता पूछने के बहाने घर में घुसे चेन स्नैचर; फिर महिला की सोने की चेन छीन ली
+ pic.twitter.com/a5EaBz0FFg