இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் : பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

BJP
By Irumporai Apr 05, 2023 04:33 AM GMT
Report

நமது இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்திர பிரதேச மாநில பாஜக அமைச்சர் ரகுராஜ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உத்திர பிரதேச பாஜக அமைச்சர் ரகுராஜ் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் நாட்டின் மக்கள் தொகை பற்றியும், குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றியும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் : பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு | Uttar Pradesh Bjp Minister Raghuraj Created

ரகுராஜ் சிங் அந்த விழாவில் பேசுகையில், மக்கள் தொகை பற்றி நாம் கவலைப்படக்கூடாது. நமது இளைஞர்கள் இரண்டு அல்ல 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். உங்களால் வளர்க்க முடியவில்லை என்றால் எங்களிடம் தாருங்கள் நாங்கள் வளர்க்கிறோம். என பேசினார். 

உ.பி பாஜக அமைச்சர் சர்ச்சை

மேலும், நமது பலத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நாம் பாடம் கற்பித்துள்ளோம். இந்தியாவில் ராமராஜ்யம் நிறுவப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்ற செய்தியை ஜெய்ப்பூரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். என சர்ச்சைக்குரிய வகையில் உத்திர பிரதேச மணிலா அமைச்சர் ரகுராஜ் சிங் தெரிவித்தார்.