2 மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவர் - கேள்வி கேட்ட செய்தியாளர் மீது தாக்குதல்.. - வீடியோ வைரல்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini 1 வாரம் முன்

உ.பி.யில் 2 மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர் மீது ஹெல்மெட்டை வீசி மருத்துவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் மீது ஹெல்மெட்டை வீசி தாக்கிய மருத்துவர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

உத்தரபிரதேசம், மாவ் மாவட்ட மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவரிடம், 2 மணி நேரம் தாமதமாக வந்ததை பற்றி பத்திரிகையாளர் டாக்டரிடம் கேள்வி கேட்கிறார்.

அப்போது, இந்த கேள்வியால் கோபமடைந்த மருத்துவர் பத்திரிகையாளர் மீது ஹெல்மெட்டை எறிந்து அடிக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவைலத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மருத்துவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.     

uttar-pradesh-attack-viral-video