தாடியை இழுத்து முஸ்லீம் இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்... - பின்னணி என்ன?- வெளியான தகவல்

Viral Video Uttar Pradesh
By Nandhini Jan 16, 2023 08:13 AM GMT
Report

முஸ்லீம் இளைஞரை தாக்கிய சம்பவத்தின் பின்னணி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத்தைச் சேர்ந்த அசிம் ஹுசைன் என்ற இளைஞரை, கடந்த வியாழக்கிழமை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடாததால் ரயிலில் இளைஞர் கும்பல் தாக்கப்பட்டதாக வீடியோ வைரலானது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கமெண்ட் செய்தனர்.

இது தொடர்பாக உ.பி. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் இச்சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில், உசேன் ஒரு பெண்ணிடம் மானபங்கம் செய்துள்ளதாகவும், அதனால், அக்கும்பல் இவரை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

uttar-pradesh-attack-viral-video