ரயிலில் பயணித்த முஸ்லிம் இளைஞரின் தாடியை இழுத்து சரமாரியாக தாக்கிய கும்பல்...!
இளைஞரின் தாடியை இழுத்து சரமாரியாக தாக்கிய கும்பல்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேசம், மொராதாபாத்தில் ரயிலில் பயணித்த முஸ்லிம் ஒருவரை சட்டையை கழற்றி விட்டு, இளைஞர் கும்பல் சரமாரியாக தாக்கியது. முஸ்லிம் இளைஞரின் தாடியை இழுத்து, "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை முழங்க அவரை கட்டாயப்படுத்தி, பெல்ட்டால் கொடூரமாக அக்கும்பல் தாக்குகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Location: Moradabad, Uttar Pradesh
— HindutvaWatch (@HindutvaWatchIn) January 14, 2023
A group of young men assaulted a Muslim businessman while traveling in a train.
They pulled his beard, forced him to chant “Jai Shri Ram” slogans, and brutally thrashed him with belts.
Note: Graphic visuals pic.twitter.com/uNB12Co5u5