வியாபாரிகளின் கடைகளை வெறியோடு உடைத்தெறிந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகள் - வைரலாகும் வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Oct 25, 2022 01:11 PM GMT
Report

வியாபாரிகளின் கடைகளை உடைத்தெறிந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகளின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடைகளை உடைத்தெறிந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் மகள்

இணையதளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், உத்தரபிரதேச தலைநகர் லக்னோ, கோமதிநகர் பட்ரகர்புரத்தில், சாலையோர விற்பனையாளர்களின் கடைகளை ஒரு பெண் குச்சியை கொண்டு வந்து பொருட்களை உடைத்தெறிகிறாள்.

இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். பண்டிகைக் காலத்தில் உள்ளூர் வியாபாரிகள் தன் வீட்டின் முன் கடைகளை வைத்ததால் அப்பெண் கோபப்பட்டுள்ளார்.

அப்பெண் வியாபாரிகளிடம் கடைகளை அகற்றுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், அவர்கள் அசையாமல் இருந்தபோது, ​முதலில் வியாபாரிகள் மீது தண்ணீரை கொண்டு வந்து ஊற்றியுள்ளார்.

பின்னர், குச்சியை எடுத்து வந்து கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அப்பெண் உடைத்தெறிந்தாள்.

இது குறித்த வீடியோ வைரலானதையடுத்து, விசாரணையில், அப்பெண் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சங்கர் லாலின் மகள் என்பது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அப்பெண் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.   

uttar-pradesh-attack-ex-ias-officer-daughter