உ.பி. மசூதியில் புகுந்து குரான் நகலை எரித்து பதற்றத்தை ஏற்படுத்திய நபர் - சுற்றி வளைத்து பிடித்த போலீசார்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 04, 2022 04:30 PM GMT
Report

உ.பி. மசூதியில் புகுந்து குரான் நகலை எரித்து பதற்றத்தை ஏற்படுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மசூதியில் குரான் நகல் எரிப்பு 

உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில், ஃபக்ரே மியான் மசூதியில் இரண்டு நாட்களுக்கு முன், குரான் நகலை யாரோ மர்ம நபர் எரித்து விட்டு சென்றுவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் வகுப்புவாத பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பாஜக போஸ்டர்கள் எரிக்கப்பட்டன. இந்து சமூகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளியை தேடினர். அப்பகுதியில் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது மசூதிக்குள்ளிலிருந்து ஒரு நபர் வெளியே வந்தது பதிவாகியிருந்தது. இது குறித்த சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மதத்தை இழிவுபடுத்தும் வெட்கக்கேடான செயல். உத்திரபிரதேச அரசு மற்றும் உ.பி காவல்துறை குற்றவாளியை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வந்தனர்.

uttar-pradesh-arrest-accused

கைது

இந்நிலையில், மியான் மசூதியில் குரான் நகலை எரித்த முஸ்லீம் நபர் தாஜ் முகமதை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.