உ.பி. இறைச்சி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு...50 பேர் மயக்கம் - அதிர்ச்சி வீடியோ

Viral Video Uttar Pradesh
By Nandhini 2 மாதங்கள் முன்

உ.பி. இறைச்சி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததால் 50 பேர் மயக்கமடைந்து விழுந்தனர்.

அம்மோனியா வாயு கசிவு

உத்திரபிரதேச மாநிலம், அலிகரில் ரோராவர் பகுதியில் அல்-துவா இறைச்சி தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த இறைச்சி தொழிற்சாலையில், திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதனையடுத்து, மயக்கமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயக்கமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

uttar-pradesh-al-dua-meat-factory-ammonia-gas-leak