பர்தா அணிந்து துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர் - வெளியான அதிர்ச்சியில் தகவல்...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Dec 03, 2022 10:31 AM GMT
Report

உ.பி.யில் பர்தா அணிந்து துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பர்தா அணிந்து துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்

உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹாவில் பர்தா அணிந்து ஒரு பெண் அப்பகுதியில் சுற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருந்தார். இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பெண்ணை மடக்கிப்பிடித்தனர். பர்தாவை நீக்கி பார்த்தபோது, அது பெண் இல்லை. இம்ரான் என்ற ஆண் நபர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியையும், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது, இம்ரான் ஒரு சம்பவத்தை நிறைவேற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

uttar-pradesh-accused-police-arrested