ரிக்ஷாக்காரரை சாலை விபத்தில் இழுத்துச் சென்ற கார் - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்...!
உ.பி.யில் ரிக்ஷாக்காரரை சாலை விபத்தில் இழுத்துச் சென்ற காரின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிக்ஷாக்காரரை இழுத்துச் சென்ற கார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரப்பிரதேசம், லக்னோவில் உள்ள பரிவர்தன் சௌக் அருகே கார் ஒன்று ஒருவரை சாலையில் இழுத்துச் செல்கிறது. இச்சம்பவம் கடந்த 19ம் தேதி அன்று நடந்துள்ளது. இந்த விபத்தில் ஜிது சிங் என்ற ரிக்ஷாக்காரர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த உத்திரப்பிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A CCTV footage of an SUV dragging a man on the road near posh #ParivartanChowk in #UttarPradesh's #Lucknow has surfaced.
— Hate Detector ? (@HateDetectors) February 21, 2023
The victim identified as #JituSingh, a rickshaw puller died in the accident that took place on February 19. pic.twitter.com/T2aBiQNCnf