சாலையில் பொதுமக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்.. - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Uttar Pradesh Accident
By Nandhini Jan 11, 2023 02:45 PM GMT
Report

உ.பி.யில் சாலையில் இருந்த மக்கள் மீது கார் ஒன்று வேகமாக மோதிவிட்டு, நிற்காமல் சென்ற சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மீது மோதி நிற்காமல் சென்ற கார்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில், ஆர்.எஸ்.எஸ். பாஜகவைச் சேர்ந்த ஒருவரது கார் தெருவில் மின்னல் வேகத்தில் ஓடியது. அப்போது, வேகமாக வந்த கார் சாலையில் இருந்த பொதுமக்கள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், வசுந்தரா செக்டார்-10ல் ஒரு தம்பதியினரின் குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் துப்பறிந்தனர்.

தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

uttar-pradesh-accident-car-viral-video