கொதிகலன் வெடித்து சிதறி கோர விபத்து... - கிடங்கு இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு...!
உ.பி.யில் கொதிகலன் வெடித்து சிதறி கோர விபத்தில், கிடங்கின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொதிகலன் வெடித்து சிதறி 5 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசம், மீரட், தவுராலா போலீஸ் எல்லையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குளிர்பதனக் கிடங்கின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிடங்கு இடிபாட்டில் சிக்கிய ஒரு நபர் தன்னை காப்பாற்றக்கோரி கைக்காட்டி அழைக்கிறார். அப்போது அவர் அருகில் சென்ற நபர் அவரை மீட்க முயற்சி செய்கிறார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
