பணியின்போது சினிமா பாட்டுக்கு நடனமாடிய 4 பெண் போலீசார் சஸ்பெண்ட் - வைரலாகும் வீடியோ...!
4 பெண் கான்ஸ்டபிள்கள் சினிமா பாடலுக்கு நடனமாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
4 பெண் போலீசார் சஸ்பெண்ட்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் இந்து மத கடவுள் ராமரின் வழிபாட்டு தலம் கட்டும்பணிகள் ராம ஜென்மபூமி என்ற பணி நடந்து வருகிறது. இதனையடுத்து, இந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமஜென்ம பூமி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் கான்ஸ்டபிள்கள் 4 பேர் பணியின் போது போஜ்புரி பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
3 கான்ஸ்டபிள்கள் நடனமாட அதை மற்றொரு பெண் கான்ஸ்டபிள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து 4 பெண் போலீசாரும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
#VideoReel बनाने पर महिला। पुलिसकर्मी सस्पेंड। #राममंदिर की सुरक्षा ड्यूटी पर तैनात थीं #UPPolice की जवान। क्या #बाबा रील बनाते पकड़े गए तो उन्हें भी सस्पेंड किया जाएगा?#Ayodhya #RamMandir pic.twitter.com/tKPJY4Ip1p
— Article19 India (डिजिटल जुबान) (@Article19_India) December 15, 2022