3 பைக்கில் வந்த 14 இளைஞர்கள்... - 20 கிலோ மீட்டர் தூரம் விளையாடி சென்ற அதிர்ச்சி வீடியோ...!
உ.பி.யில் 3 பைக்கில் 14 இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த அதிர்ச்சி வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பைக்கில் 6 பேர் பயணம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உத்தரபிரதேசம், பரேலியில் உள்ள நைனிடால் நெடுஞ்சாலையில், ஒரே பைக்கில் 6 பேர் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
இவர்கள் பயணம் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவர்களை கண்டித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில், வீடியோ வைரலானதையடுத்து, இரண்டு வண்டிகளில் தலா நால்வர் என மொத்தம் 14 பேரின் பயணம் செய்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 बाइक पर 14 युवकों ने 20 km तक हवा बाजी कर सड़क को आसमान बना दिया || ST... https://t.co/NvnlqC02XF via @YouTube #uttarpradesh #bareilly #youths #riding #three #bike #doing #stunts #police #challan#stvnindia #audioviral #viralvideo pic.twitter.com/zqJCQoKLNs
— sagar tv news (stvn india) (@SagarTvnewsStvn) January 11, 2023