அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் எளிய ஆசனம்...!
அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்றவை நம் அன்றாட வாழ்வில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஆகும்.
இது உடலின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நாம் மிகுந்த அக்கறையோடு இதனை தீர்க்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு உத்தன்பாதாசனம் மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.
செய்யும் முறை:
விரிப்பில் படுத்து கைகள் இரண்டையும் பக்க வாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கால்கள் இரண்டையும் சற்றே உயரமாக 45 டிகிரி கோணத்தில் தூக்க வேண்டும். இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இதேபோன்று 3 முதல் 5 முறை செய்யலாம்.
ஆசனத்தின் பலன்கள்:
இதனால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு கோளாறுகள் குணமாகிறது. அடிவயிற்று உறுப்புகளை வலுவடைவதோடு முதுகு, இடுப்பு மற்றும் தொடை தசைகளை வலுவாகிறது.
மேலும் வாய்வு கோளாறு, அஜீரண வாந்தி, மூட்டுவலி, இதயக் கோளாறு மற்றும் இடுப்பு வலி போன்றவற்றிற்கும் தீர்வு கிடைக்கிறது. தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆசனமாகும்.