யாருக்கு கர்ப்பப்பை இறக்கம் ஏற்படும்? ஏன், என்ன சிகிச்சை - கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
கருப்பை இறக்கம் குறித்து ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும்.
கருப்பை இறக்கம்
கர்ப்பப்பை தாங்கி பிடிப்பது தசைநார்கள் தான். இவற்றோடு இடுப்பின் அடிப்பகுதி தசைநார்களும் பலவீனமாகும் போது கர்ப்பப்பை அடி இறக்கம் வரலாம்.
தும்மும் போது, இருமும் போது வயிற்றில் இருந்து கட்டி இறங்குவது போன்ற உணர்வு இருக்கும். பின் முதுகு வலி இருக்கும். கர்பப்பை அடி இறங்கும் போது சிறுநீர்ப்பை சேர்ந்து இறங்கும். இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற பல்வேறு அறிகுறிகள் இருக்கும்.
என்ன செய்யலாம்?
கர்ப்பப்பை அடி இறங்கும் போது குடலும் அடி இறங்கும். இது மலம் கழிக்கும் போது சிரமத்தை உண்டு செய்யும். உடலுறவு கொள்வதில் சிக்கல் இருக்கலாம். அல்சர் போன்ற பிரச்சனைகளையும் உண்டு செய்யலாம்.
கர்ப்பப்பை அடி இறக்கம் வருவதை தவிர்க்க பிரசவம் முடிந்த ஆறு மாதங்கள் ஆன நிலையில் கெகல் பயிற்சிகள் செய்யலாம். இது இடுப்பு தசைநார்களை பலமாக்குவதால் கர்ப்பப்பை தளராமல் வைத்திருக்க செய்யும். கடினமான எடை தூக்குவதை நிறுத்த வேண்டும்.
introitus prolapse pessary என்னும் சிகிச்சை முறையில் வளையம் போன்ற கர்ப்பப்பை உள்ளே பொருத்துவது சாதகமாக இருக்கும். அவ்வபோது இந்த வளையத்தை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த பாதிப்பை முதல் நிலையில் கண்டறிந்தால் உடல்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மூலம் கட்டுக்குள் வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.