இந்திய அணி செய்த இந்த சம்பவத்தை மறக்கவே முடியாது: புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்
இந்திய அணி செய்த இந்த ஒரு சம்பவத்தை தன்னால் மறக்கவே முடியாது என ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதன் 4வது டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 329 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு மட்டுமில்லாமல் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியா தோற்று விடும் என்று அனைவரும் நினைத்ததாக ஆஸி., வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா எப்படி அந்த போட்டியில் வெற்றி பெற்றது என்று இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என்றும், ஆஸ்திரேலியாவை மனதளவில் இந்திய அணி வீழ்த்தியது என்றுதான் கூறவேண்டும் எனவும் கவாஜா கூறியுள்ளார்.