தடகள வீரர் உசேன் போல்ட்டுக்கு இரட்டை குழந்தை - குழந்தைகளுக்கு என்ன பெயர் சூட்டினார் தெரியுமா?
உலகின் நட்சத்திர தடகள வீரராக இருக்கும் உசேன் போல்ட், அண்மையில் பிறந்த தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தடகளத்தில் உலகின் ஜாம்பாவனாக திகழ்ந்த உசேன் போல்ட், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதங்கங்களையும், பரிசுகளையும் வாரிக் குவித்துள்ளார்.
தடகளத்தில் அவர் படைத்துள்ள உலக சாதனைகள் அவரே முறியடித்தால் மட்டுமே உண்டு என்ற அளவுக்கு தன்னுடைய முத்திரையை உலக அரங்கில் ஆணித்தரமாக பதித்துள்ளார்.
ஜமைக்காவைச் சேர்ந்த இவருக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அண்மையில், தந்தையர் தினத்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
அந்தப் புகைப்படத்தில் அவர், அவருடைய காதலி பென்னட் மற்றும் மகள் ஒலிம்பியா லைட்டனிங் போல்ட் ஆகியோர் உள்ளனர்.
மேலும் அவருக்கு புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். அவரது இரு மகன்களுக்கும் பெயரிட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
அந்த இரு அழகிய குழந்தைகளுக்கும் தண்டர்போல்ட், செயிண்ட் லியோ போல்ட் என பெயரிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தை கண்ட இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உறைந்துள்ளனர்.