அமெரிக்க வன்முறையில் மூவர்ண கொடியை ஏந்தியது ஏன்? கேரளாவைச் சேர்ந்தவர் விளக்கம்

usa-trump-biden-america
By Jon Jan 10, 2021 07:34 AM GMT
Report

அமெரிக்க நிகழ்ந்த வன்முறையில் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தியதற்கான காரணத்தை கேரளாவைச் சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியர் விளக்கம் அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், ஒரு நபர் தனியாக இந்தியக் கொடியுடன் கலந்துகொண்டார், அந்த பேரணி கலவரமாக மாறியதால் உலகளவில் பேசு பொருளானது,குறிப்பாக கலவரத்தில் இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்தியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.  

இந்த நிலையில் தேசப்பக்தியுடனே பேரணிக்கு சென்றதாகவும் ,இந்தியக் கொடியை பயன்படுத்தியதற்கு வருந்தவில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்திய தேசிய கொடியினை அமெரிக்க கலவரத்தில் பயன்படுத்தியவர் பெயர் சேவியர், வர்ஜீனியாவில் வசிக்கும் இவர், இந்தியாவில் கேரளாவை பிறப்பிடமாக கொண்டவர்.

டிரம்ப் பேரணிக்கு தேசப்பற்றுடன் சென்றதாகவும், சில குற்றவாளிகள்அன்று கேபிட்டலுக்குள் நுழைந்ததாகவும், அதனாதான் கலவரம் உருவானது என்றும் அவர் கூறினார். மேலும், கொடியை ஏந்திய எனது முடிவுக்கு நான் வருத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.