டிரம்பின் அதிரடி திட்டத்தால் அச்சத்தில் திளைக்கும் அமெரிக்கா வாழ் தமிழர்கள்

usa-trump-biden-america
By Jon Jan 08, 2021 02:34 PM GMT
Report

அமெரிக்காவில் டிரம்ப் அவர்களது நடவடிக்கையால் மிகுந்த அஸாஹத்தில் தவித்து வரும் அமெரிக்கா வாழ் தமிழர்கள். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டார்.

ஆனால் அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். மேலும் டிரம்ப் அவர்கள் தனது ஆதரவாளர்களை மறைமுகமாக வன்முறைக்கு தூண்டுவதாக பலவேறு குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டன.

அமெரிக்க வரலாற்றில் இதுபோல் மோசமான நிகழ்வுகள் நடந்ததில்லை. ஜனவரி மாதம் 20 ஆம் நாள் பதவி ஏற்கும் முன்பாக மீண்டும் பல்வேறு அசம்பாவிதமும், வன்முறையும் நடக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்களும், குடியேறிய மக்களும் அச்சத்துடன் நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்து வருகின்றனர்.

மேலும் இரண்டு வாரங்கள் காத்திராமல் டிரம்பை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்றும் குரல்கள் வலுக்கின்றன, இந்த பிரச்னைகள் ஜனவரி 20 ஆம் தேதியோடு ஓய்ந்தாலும் அமெரிக்காவை இனவெறிப் பிளவு கொண்ட நாடாக அவர் மாற்றியுள்ளதால் தொடர்ந்து பல்வேறு குற்றங்கள் நடக்கலாம், அவர் அதைத் தூண்டிவிடுவார் என்று தமிழர்களாகிய நாங்கள் அஞ்சுகிறோம், அமெரிக்கா தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.