என் சாதனைகளுக்காக என்னை நினைவு கூற வேண்டும் - டிரம்ப் பெருமிதம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் நீண்ட உரையை ஆற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”சீன வைரஸ் (கொரோனா வைரஸ்) தாக்கத்திலிருந்து அமெரிக்கர்களை காப்பாற்றி அவசர மருத்துவ சேவைகளை செய்து எங்களது ஆட்சியில் சாதனை படைத்துள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த புத்தாண்டின்போது குடியரசுக் கட்சி மற்றும் என்னுடைய தனிப்பட்ட சாதனைகளை அமெரிக்கர்கள் கட்டாயம் நினைத்துப் பார்க்கவேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வேலை இழந்த நடுத்தர வர்க்க அமெரிக்கர்களுக்கு உதவும் நிதி மசோதாவை ஒப்புதல் தர மறுத்த டிரம்ப், பின்னர் ஒருவழியாக அதில் கையெழுத்திட்டார்.
நேற்று அவர் புளோரிடாவில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு தனி விமானம்மூலம் வந்தடைந்தார். பின்னர் அமெரிக்க மக்களுக்கு தனது புத்தாண்டு உரையை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் டெல்வரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் முதல்நிலை பணியாளர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அவர், கண்டிப்பாக அமெரிக்கா இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.