Sunday, May 4, 2025

திடீரென மூடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் பதட்டத்தில் அமெரிக்கா

trump united states
By Jon 4 years ago
Report

ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இந்த நிலையில் இன்று திடீரென அமெரிக்க நாடாளுமன்றத்தை மூட உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது.

அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அமெரிக்காவிற்கு அவமானமாக பார்க்கபட்டது.

இந்த நிலையில் நாளைமறுநாள் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளதால் அதற்கான ஒத்திகை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென நாடாளுமன்றத்தை மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர். அத்துடன் உள்ளே யாரும் வரவும், வெளியே செல்லவும் தடைவிதித்தனர்.

உடனடியாக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படையினர் மின்னல் வேகத்தில் நாடாளுமன்ற வளாக்தில் குவிந்ததனர். அதே சமயம் நாடாளுமன்றம் அருகில் உள்ள இடத்தில் லேசான தீ விபத்து ஏற்பட்டதாலும்,வெளிப்புற பாதுகாப்பு அச்சுறுத்தலால் காரணமாகவும் நாடாளமன்றம் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.