அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

president biden kamala harris
By Jon Feb 10, 2021 04:35 PM GMT
Report

முன்னாள் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு எதிரான 2வது தகுதி நீக்க தீர்மானம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த மாதம் 6-ந்தேதி வன்முறையில் இறங்கியதை தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுமார் 7 ஆயிரம் வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. மார்ச் மாதம் 15-ந்தேதி வரையில் இந்த படை வீரர்கள் பாதுகாப்புக்கு 483 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,525 கோடி) செலவாகும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான 2-வது தகுதி நீக்க தீர்மானம் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது.