ரொம்ப தப்பு பண்ணுறிங்க என் இதயமே நொறுங்குது'.. ஆப்கானில் வெளியேறும் அமெரிக்க படைக்கு ஜார்ஜ் புஷ் கண்டனம்!

decision afghanistan formerpresidentbush
By Irumporai Jul 14, 2021 03:01 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது, இது என் இதயத்தையே பாதிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்து தாலிபான் இடையே போர் நிறுத்தஒப்பந்தம் செய்தது.

அதன்படி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேறும் அமெரிக்க படைகள் வெளியேறிவருவதால் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி வருகின்றனர்.

  ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது .

அமெரிக்காவின் இந்த முடிவை உலக நாடுகள் பல விமர்சித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ்புஷ் கூறியுள்ள கருத்தில் ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்கள் கொன்று குவிக்கிறார்கள்.

அவர்களை பாதுகாக்காமல் அமெரிக்க படைகள் வெளியேறிவிட்டது. ஆப்கானிஸ்தானின் பெண்களும், குழந்தைகளும் பல கொடுமைகளை, கஷ்டங்களை, அனுபவித்து  அனுபவிக்க போகிறார்கள்.

கொடுமையான குணம் கொண்ட தாலிபான்கள் தங்கள் நாட்டு மக்களையே கொன்று குவிக்க போகிறார்கள். இது என் இதயத்தை நொருக்கிறது, என்று புஷ் ஜெர்மன் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.