ஜோ பைடன் பதவியேற்பு.. ஈரான் பழிவாங்கக்கூடும்.. இஸ்ரேல் எச்சரிக்கை

usa-biden-kamalaharies-america
By Jon Jan 06, 2021 12:03 PM GMT
Report

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வருகிற 20-ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட பல விபரீதமாக முடிவுகளிலிருந்து பைடன் பின்வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதில் ஒன்று ஈரான் உடனான மோதல் போக்கை தவிர்த்து மீண்டும் அமைதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ட்ரம்ப் ஈரானின் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொலை செய்ய உத்தரவிட்டார்.

இது பெரும் பதற்றத்திற்கு வித்திட்டது. சுலைமானி படுகொலைக்கு பழி தீர்ப்போம் என ஈரான் சூழுரைத்திருந்தது. ஆனால் தற்போது வரை மௌனமே காத்து வருகிறது. இந்நிலையில் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ஈரான் அமெரிக்காவை பழிவாங்கும் திட்டத்தில் உள்ளதாக இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் எச்சரித்துள்ளது.

இதனால் அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுப்பிரிவு தீவிர கண்கானிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.