டிரம்ப் ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டது - ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு
டொனால்ட் டிரம்ப் அவர்களின் ட்விட்டர் கணக்கை முற்றிலுமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக டிரம்ப் அவர்களது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வெள்ளை மளிகை முன்பு வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர்.
இதனிடையே தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய காணொளிகளை ட்விட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.
இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து அதிரடியாக நீக்கினர்.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் @realDonaldTrump ட்விட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்ற (பாலோயர்கள்) அதிர்ச்சி அடைந்துள்ளனர்.