ஆப்கனில் அமைதியினை நிலைநாட்ட குவாட் கூட்டமைப்பு : அமெரிக்கா அறிக்கை!

usa quadgroup afghanisthan
By Irumporai Jul 18, 2021 10:24 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் மோசமான சுழலுக்கு பிராந்திய நாடுகள் குவாட் என்ற கூட்டமைப்பினை அமெரிக்கா ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானில் இருபது வருடங்களை கடந்து அமெரிக்கா நேட்டோ படைகள் அந்நாட்டு ராணுவத்திற்கு உதவி புரிந்து வந்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க படைகள் வெளியானதால் தாலிபான்கள் ஆப்கானை தங்களின் கைவசப் படுத்தியுள்ளனர்.

இதனால் அப்கானில் மோசமான நிலைமை நீடித்து வருவதால் இதனை அடுத்து குவாட் என்ற அமைப்பினை ஏற்படுத்த போவதாக பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி குவாட் கூட்டமைப்பில் பிராந்திய நாடுகளான அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் உஸ்பெஸ்கிஸ்தான் போன்றவை ஆப்கானின் சமாதான முயற்சிகளில் முன்னெடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த குவாட் என்ற வார்த்தைக்கு நான்கு தரப்பு பாதுகாப்பு என பொருள். மேலும் பிராந்திய நாடுகளின் இணைப்பிற்கு நிலைத்தன்மை மற்றும் அமைதி மிகவும் முக்கியமானதாகும்.

அதன்படி ஒருமித்த மனத்துடன் ஒத்துழைப்பின் முடிவுகளை எடுக்க வரும் நாட்களில் அமைதி ஏற்படும்எனக் கூறப்பட்டுள்ளது.