ஆண்களுடன் இனி ‘அது’ இல்லை - பெண்கள் அதிரடி முடிவு

Texas Bettemidler Abortion law
By Petchi Avudaiappan Sep 09, 2021 01:14 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட மாட்டோம் என பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கருக்கலைப்பு செய்வது குற்றம் என்பது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சட்டமாக உள்ளது. இதற்காக தடையும் இருந்து வரும் நிலையில் இந்த நாடுகளில் மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவை பெற்ற பின்னரே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்த கருக்கலைப்பு சட்டவிரோதம் என்ற சட்டம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய கருக்கலைப்பு சட்டப்படி,கருவில் சிசுவின் இதயதுடிப்பு உணரப்பட்ட காலத்திற்கு பின்னர் கருக்கலைப்பு செய்ய அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு செய்வதாக இருந்தால் அதற்கு முன்னரே செய்து கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதயத்துடிப்பை உணர 6 வாரங்கள் ஆகலாம். இந்த 6 வார காலகட்டத்திற்குள் தாங்கள் கருவுற்றிருக்கிறோம் என்பதே பெரும்பாலான பெண்களுக்கு தெரியாது.

இது எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சர்ச்சைக்குள்ளான இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் தரப்பில் சிலர் முறையிட்ட நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசின் முடிவில் தலையிட முடியாது என ஒதுங்கியது மேலும் ஆத்திரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியது.

பெண்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகியும், நடிகையுமான பெட்டே மிட்லர் கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடாமல் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுக்க போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.